திங்கள், 28 செப்டம்பர், 2009

பழகு மொழி - 10


தமிழ் + சொல் = தமிழ் சொல் என்று எழுதுவது சரியா?

தமிழ் + ச் + சொல் = தமிழ்ச் சொல் என 'ச்' எனும் மெய்யைச் சேர்த்து எழுதுவது சரியா? போன்ற (மெய்)மயக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அடுத்து வரவிருக்கும் சொல்லியல் பாடத்தில் 'வலிமிகுதல்', 'வலிமிகா இடங்கள்' ஆகிய இரண்டு பகுதிகளில் அவற்றை விரிவாகப் படிக்க இருக்கிறோம். இன்றைய பாடம் எழுத்து வகை மெய் மயக்கமாகும்.


(1):10 மெய் மயக்கம்

"அக்கம், அன்பு ஆகிய இரு சொற்களில் எத்தன மெய்கள் உள்ளன?" என ஒரு வினாவை எழுப்பினால், "முதல் சொல்லான அக்கம் இரு மெய்களையும் இரண்டாவது சொல்லான அன்பு, ஒரு மெய்யையும் கொண்டிருக்கின்றன" என்றே விடை சொல்வோம். ஆனால், இந்தப் பாடத்தைப் பொருத்த மட்டில் அந்த விடை தவறானதாம்.


(1):10:1 உடனிலை மெய் மயக்கம்

அக்கம் எனும் சொல், அ+க்+க்+அ+ம் எனப் பிரியும். எனவே, ('அ' எனும்) ஓர் உயிர், ('க்' எனும்) ஒரு தனிமெய், (க்+அ='க' எனும்) ஓர் உயிர் மெய், ('ம்' எனும்) ஒரு தனிமெய் ஆகியன அக்கம் எனும் சொல்லில் அடங்கி இருக்கின்றன.

ஒரு சொல்லுக்குள் ஒரு (க்) தனிமெய்யும் அதையடுத்து (க் எனும்) அதே மெய், (அ எனும்) உயிர் கலந்து (க்+அ=க என்று) இரட்டித்து வருவதை, "உடனிலை மெய் மயக்கம்" எனக் கூறுவர்.

கீழ்க்காணும் காட்டுகள் பாடம் (1):8இல் கொடுக்கப் பட்டன:

பாக்கம் (பா+க்+க்+அ+ம்), அச்சம் (அ+ச்+ச்+அ+ம்), வாட்டம் (வா+ட்+ட்+அ+ம்), இங்ஙனம் (இ+ங்+ங்+அ+ன்+அ+ம்), அஞ்ஞானம் (அ+ஞ்+ஞ்+ஆ+ன்+அ+ம்), கண்ணன் (க+ண்+ண்+அ+ன்), பொய்யாமொழி (பொ+ய்+ய்+ஆ+ம்+ஒ+ழ்+இ).


(1):10:2 வேற்றுநிலை மெய் மயக்கம்

'அன்பு' (அ+ன்+ப்+உ) எனும் சொல்லில் ('அ' எனும்) ஓர் உயிரும் ('ன்' எனும்) ஒரு தனிமெய்யும் ('பு' எனும்) ஓர் உயிர் மெய்யும் உள்ளன. இவ்வாறு ஒரு தனிமெய்யை அடுத்து அதே மெய்யல்லாத வேறொரு மெய்(ப்), உயிர்(உ) கலந்து(பு) வருவதை. "வேற்றுநிலை மெய் மயக்கம்" எனக் கூறுவர்.

(1):10:3 இரு தனிமெய் எழுத்துகள்

உரைநடையில், தன்னை அடுத்து இன்னொரு தனிமெய்யை ஏற்றுக் கொள்ளும் தனிமெய்கள் ய்,ர்,ழ் ஆகிய மூன்றாகும். "ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற" - தொல்காப்பியம், எழுத்தியல் 15. (செய்யுள்களில் ஒற்றளபெடை எனும் விதிவிலக்கு உண்டு).

காட்டுகள்:

ய் : வாய்க்கால், பாய்ச்சல், காய்த்தல், வாய்ப்பு

ர் : பார்க்க, உணர்ச்சி, பெயர்த்து, ஈர்ப்பு

ழ் : வாழ்க்கை, மகிழ்ச்சி, வாழ்த்து, காழ்ப்பு


(1):10:4 ஏற்பன, மறுப்பன, சேர்ப்பன

ஒரு சொல்லுக்குள் 'ச'கர மெய்(யான ச்)ஐ அடுத்து 'ச'கர வரிசை (உயிர்) மெய் மட்டுமே இடம் பெறும். தன்னை ஒட்டி வேறு எந்த (உயிர்) மெய்யையும் சகர மெய் ஏற்காது.

காட்டுகள்:
ச்சை, கச்சு, இச்சை, தச்சு, குச்சி.

க,த,ப ஆகிய வல்லின மெய்களுள் எதுவும் தன்னை ஒட்டி, தன் இன (உயிர்) மெய்யைத் தவிர பிற இரண்டின் (உயிர்) மெய்களை ஏற்பதில்லை. அவ்வாறு ஏற்பவை தமிழ்ச் சொற்களாகா என்பதறிக.

காட்டுகள்:
க்தி, சப்தம், சமத்காரம் ஆகியன வடமொழிச் சொற்களாகும்.

வல்லின மெய்களை ஒட்டி வல்லினமே அல்லாது மெல்லின, இடையின (உயிர்) மெய் எழுத்துகள் இடம் பெற்றிருந்தால் அவை வடமொழிச் சொற்களாகவே இருக்கும்.

காட்டுகள்:
நாகரத்னம் (மெல்லினம்), சாத்வீகம் (இடையினம்), வியாக்யானம் (இடையினம்) ஆகியன வடமொழிச் சொற்களாகும்.

இதனாற்றான், மேற்காணும் வடமொழிச் சொற்களோடு தமிழ்ச் சொல் இலக்கணத்துக்கு ஏற்ப முறையே நாகரத்தினம், சாத்துவீகம், வியாக்கியானம் என அச்சொல்லுக்குள் உள்ள மெய்யெழுத்து, இரட்டித்து உயிர் கலந்து எழுதப் படுகிறது.

வடசொற் கிளவிவடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே - தொல்காப்பியம், எச்சவியல் 5.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில்

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

பழகு மொழி - 09


(1):6 சொல்லின் முதலில் இடம்பெறா எழுத்துகள்:

(1):6:1 புள்ளியுடைய மெய்யெழுத்து எதுவும் சொல்லின் முதலாவதாக வராது.

(1):6:2 டகர, றகர, ஙகர, ணகர, னகர, லகர, ளகர, ழகர, வரிசைகளில் எந்த எழுத்தும் தமிழ்ச் சொல்லுக்கு முதலில் வாரா.

(1):6:3 யகர வரிசையில் யி, யீ, யெ, யே, யை, யொ ஆகிய ஆறு எழுத்துகளும் தமிழ்ச் சொல்லின் முதலில் வாரா.

(1):6:4 வகர வரிசையில் வு, வூ, வொ, வோ ஆகிய நான்கு எழுத்துகளும் தமிழ்ச் சொல்லின் முதலில் வாரா.

(1):7 சொல்லுக்குள் இடையில் வராத எழுத்துகள்:

(1):7:1 ஒரு சொல்லின் இடையில் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12 தனித்த உயிரெழுத்துகளும் உரைநடையில் இடம்பெறா. (செய்யுளில் விதிவிலக்கு உண்டு).

(1):7:2 ட், ற் என்னும் இரு எழுத்துகளை அடுத்து எந்த மெய்யும் இடம் பெறாது.

காட்ச்சி, மாட்ச்சி, அதற்க்கு, இதற்க்கு என எழுதுவது பிழையாகும்.

(1):8 சொல்லுக்குள் மெய் இரட்டித்து வராத எழுத்துகள்:

பாடம் (1):2:2இல் கூறப்பட்டிருக்கும் (க்+க்+உ=)க்கு, (ச்+ச்+உ=)ச்சு, (ட்+ட்+உ=)ட்டு ஆகியன ஒரு சொல்லின் இறுதியில் அமையாமல், இடையில் அமைந்திருந்தால் அவற்றை, "உடனிலை மெய் மயக்கம்" எனக் கூறுவர்.

காட்டுகள்:

பாக்கம் (பா+க்+க்+அ+ம்), அச்சம் (அ+ச்+ச்+அ+ம்), வாட்டம் (வா+ட்+ட்+அ+ம்), இங்ஙனம் (இ+ங்+ங்+அ+ன்+அ+ம்), அஞ்ஞானம் (அ+ஞ்+ஞ்+ஆ+ன்+அ+ம்), கண்ணன் (க+ண்+ண்+அ+ன்), பொய்யாமொழி (பொ+ய்+ய்+ஆ+ம்+ஒ+ழ்+இ).

இவ்வாறு மெய் இரட்டித்து வருதல், உடனிலை மெய் மயக்கம் ஆகும்.

ர், ழ் ஆகிய இரு எழுத்துகள் உரைநடையில் மெய் இரட்டித்து வாரா. (செய்யுளில் விதிவிலக்கு உண்டு). "மெய்ம்மயக்கு உடனிலை ர ழ ஒழித்து ஈர் எட்டு ஆகும் ..." - நன்னூல் 110.


(1):9 சொல்லின் இறுதியில் வராத எழுத்துகள்:

(1):9:1 ஆ, ஈ போன்ற ஓரெழுத்து ஒரு மொழியானது, ஒரு கடைசிச் சொல்லாக (கன்றுக்குப் பால் தரும் [பசு]; பறந்து போனது ) அன்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளைக் கொண்ட ஒரு சொல்லின் இறுதியில் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12 தனித்த உயிரெழுத்துகளும் உரைநடையில் இடம்பெறா. (செய்யுளில் விதிவிலக்கு உண்டு).

(1):9:2 க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு வல்லின மெய்யெழுத்துகளும் சொல்லுக்கு இறுதியில் வாரா.

கால்+சிலம்பு என்பதை காற் சிலம்பு என்று பிரித்து எழுதாமல் காற்சிலம்பு எனச் சேர்த்து எழுத வேண்டும்.

(1):9:3 ங், ஞ், ந் ஆகிய மூன்று மெல்லின எழுத்துகள் சொல்லின் இறுதியில் வாரா (பண்டைய இலக்கியத்தில் அரிதாக இடம் பெற்ற ஞ், ந் ஆகிய இரு எழுத்துகளும் இப்போது வழக்கொழிந்து விட்டன).

மூன்று+நூறு என்பதை முந் நூறு என்று பிரித்து எழுதாமல் முந்நூறு எனச் சேர்த்து எழுத வேண்டும்.

(1)9:4 இடையினத்தில் வ் மட்டும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.

அந்த+வாசல் என்பதை அவ் வாசல் என்று பிரித்து எழுதாமல் அவ்வாசல் எனச் சேர்த்து எழுத வேண்டும்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

-தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

பழகு மொழி - 08

படிக்கப் போறோம்
(1):5 சொல்லின் முதலில் இடம்பெறும் எழுத்துகள் (அல்லது) வருக்கம்:

(1):5:1 உயிர் வருக்கம்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12 உயிரெழுத்துகளும் சொல்லின் முதலில் வருக்கமாக வரும்.

ஆத்திச்சூடியிலிருந்து காட்டுகள்:

றஞ்செய விரும்பு, றுவது சினம், யல்வது கரவேல், வது விலக்கேல், டையது விளம்பேல், க்கமது கைவிடேல், ண்ணெழுத் திகழேல், ற்ப திகழ்ச்சி, ய மிட்டுண், ப்புர வொழுகு, துவ தொழியேல், ஒளவியம் பேசேல்.

(1):5:2 உயிர்மெய் வருக்கம்

க, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ ஆகிய எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரும்.

ண்டொன்று சொல்லேல், னி நீராடு, ந்தைதாய்ப் பேண், ன்றி மறவேல், ருவத்தே பயிர்செய், ண்பறித் துண்ணேல், ஞ்சகம் பேசேல்.

"எல்லாரிடமும் இணங்கி, நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்க" என்று அறிவுரை கூறுமுகமாய், "ப்போல் வளை" என்பதாக ஆத்திச்சூடியில் வருகிறது. எனினும், இக்கால எழுத்து வழக்கில் 'ங' வருக்கமாய் வருவதில்லை; ஆனால், காட்டுகளாகப் பயன்படுவதுண்டு: "ஞண நமன எனும்புள்ளி முன்னர்" (- தொல்காப்பியம் - எழுத்து 25); "ஞண நமன வயலள ஆய்தம்" (- யாப்பருங்கல விருத்தி).

ஞகர வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ, ஆகியன மட்டும் சொல்லுக்கு முதலில் வரும். ஞகரத்துக்குக் காட்டாக, "யம்பட உரை" என்று ஆத்திச்சூடியில் வருகிறது. "நயம்பட உரை" என்பதன் முதற்போலியாக அங்கு 'ஞ' பயன் படுத்தப் பட்டுள்ளது. எனினும் "மலி" (நாய்) எனும் நல்ல தமிழ்ச் சொல், 'ஞ'வில் தொடங்குவது ஈண்டு நோக்கத் தக்கது. மேலும், ஞாலம்=உலகம், ஞெகிழி=கொள்ளிக்கட்டை, ஞொள்கல்=இளைத்தல் ஆகிய அரிய சொற்களும் தமிழில் உள.

யகர வரிசையில் ய, யா ஆகிய இரு எழுத்துகள் தமிழ்ப் பெயர்ச் சொற்களின் முதற்போலியாகவும் யு, யூ, யோ, யௌ ஆகிய எழுத்துகள் வடமொழிச் சொற்களுக்காகவும் சொல்லின் முதலில் வருவதுண்டு:

எமன்=மன், ஆனை=யானை. இவையன்றி, யாங்கனம் (எவ்வாறு) யாது (எது) என வினா எழுத்தாகவும் யாகாரம் பயன்படுத்தப் படுவதுண்டு. யகர வரிசை வருக்கத்தில் வடமொழிச் சொற்களான யுகம், யூகம், யோகம், யௌவனம் ஆகியனவும் பயன்பாட்டில் உள்ளவையாம்.

வகர வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை ஆகிய எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்:

ரிசை, வாஞ்சை, விறகு, வீடு, வெண்ணெய், வேடன், வைகறை.

(1):5:2:1 ககர வருக்கம்

டிவது மற, காப்பது விரதம், கிழமைப்பட வாழ், கீழ்மை யகற்று, குணமது கைவிடேல், கூடிப் பிரியேல், கெடுப்ப தொழி, கேள்வி முயல், கைவினை கரவேல், கொள்ளை விரும்பேல், கோதாட் டொழி, கெளவை அகற்று.

(1):5:2:2 சகர வருக்கம்

க்கர நெறி நில், சான்றோ ரினத்திரு, சித்திரம் பேசேல், சீர்மை மறவேல், சுளிக்கச் சொல்லேல், சூது விரும்பேல், செய்வன திருந்தச்செய், சேரிடம் அறிந்து சேர், சையெனத் திரியேல், சொற்சோர்வு படேல், சோம்பித் திரியேல்.

குறிப்பு:

ச்+அ=; ச்+ஐ=சை; ச்+ஔ=சௌ ஆகிய மூன்றும் தமிழ்ச் சொல்லின் முதலில் இடம் பெறா என்பதாகத் தொல்காப்பியம் கூறுகிறது:

சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அ ஐ ஔ என்னும் மூன்றலங் கடையே
(தொல் - எழுத்து 29).

ஆனால், அம்மூன்றில் சகரத்தில் தொடங்கும் தமிழ்ச் சொற்கள் நிறைய உள. காட்டாக: ங்கு,ட்டை, ட்டம், ருகு, ரடு, த்தம் (கூலி) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மேலும் இலக்கண வகைகளுள் 'ந்தி' எனும் பெயரில் ஓர் இலக்கணம் இருப்பதும் ஈண்டு நோக்கத் தக்கது. அஃது, இரு சொற்கள் சந்திக்கும்போது ஏற்படும் மாறுதல்களைக் குறிப்பதாகும். அதைப் "புணரியல்" என்றும் கூறுவர்.

(1):5:2:3 தகர வருக்கம்

க்கோ னெனத்திரி, தானமது விரும்பு, திருமாலுக் கடிமைசெய், தீவினை யகற்று, துன்பத்திற் கிடங்கொடேல், தூக்கி வினைசெய், தெய்வ மிகழேல், தேசத்தோ டொத்துவாழ், தையல்சொல் கேளேல், தொன்மை மறவேல், தோற்பன தொடரேல்.

(1):5:2:4 நகர வருக்கம்

ன்மை கடைப்பிடி, நாடொப்பன செய், நிலையிற் பிரியேல், நீர்விளை யாடேல், நுண்மை நுகரேல், நூல்பல கல், நெற்பயிர் விளை, நேர்பட வொழுகு, நைவினை நணுகேல், நொய்ய வுரையேல், நோய்க்கிடங் கொடேல்.

(1):5:2:5 பகர வருக்கம்

ழிப்பன பகரேல், பாம்பொடு பழகேல், பிழைபடச் சொல்லேல், பீடு பெறநில், புகழ்ந்தாரைப் போற்றிவாழ், பூமி திருத்தியுண், பெரியாரைத் துணைக்கொள், பேதைமை யகற்று, பையலோ டிணங்கேல், பொருடனைப் போற்றி வாழ், போர்த்தொழில் புரியேல்.

(1):5:2:6 மகர வருக்கம்

னந்தடு மாறேல், மாற்றானுக் கிடங்கொடேல், மிகைபடச் சொல்லேல், மீதூண் விரும்பேல், முனைமுகத்து நில்லேல், மூர்க்கரோ டிணங்கேல், மெல்லினல்லாள் தோள்சேர், மேன்மக்கள் சொற்கேள், மைவிழியார் மனையகல், மொழிவ தறமொழி, மோகத்தை முனி.

(1):5:2:7 வகர வருக்கம்

ல்லமை பேசேல், வாது முற்கூறேல், வித்தை விரும்பு, வீடு பெறநில், வெட்டெனப் பேசேல், வேண்டி வினைசெயேல், வைகறைத் துயிலெழு.

(1):5:2:8 பிறமொழிச் சொற்களுக்கு

பிறமொழிச் சொற்களுக்காக டகரம், ரகரம், லகரம் ஆகியன சொல்லின் முதல் எழுத்தாகப் பயன் படுவதுண்டு:

ச்சு, கசியம், ஞ்சம் போன்றவற்றை அப்படியே எழுதுவதில் தவறில்லை. இடச்சு, இரகசியம், இலஞ்சம் என இகரம் சேர்த்து எழுத வேண்டுவதில்லை.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

-தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.