வியாழன், 27 ஆகஸ்ட், 2009

பழகு மொழி - 07

(1):4 முற்றியலுகரம் (ஒரு மாத்திரை)
முற்றியலுகரத்தைச் சரியாக ஒலிப்பதற்கு இதழ்கள் இரண்டையும் குவிக்கும் முயற்சி தேவை.

(1):4:1 ஓரெழுத்து முற்றியலுகரம்

'உ' என்ற தனித்த உயிரெழுத்தும் காட்டுகளாக ஆளப்படும்

கு, சு, டு, து, பு, று

ஙு, ஞு, ணு, நு, மு, னு

யு, ரு, லு, வு, ழு, ளு

ஆகிய தனித்த உகர உயிர்மெய் அனைத்தும் முற்றியலுகரமாகும்.

(1):4:2 ஈரெழுத்து முற்றியலுகரம்

ஒரு சொல் இரண்டு எழுத்துகளில் அமைந்து, முதல் எழுத்து, குறிலாகவும் இரண்டாவது (இறுதி) எழுத்து

கு, சு, டு, து, பு, று

ணு, மு, னு

யு, ரு, லு, வு, ழு, ளு

ஆகிய எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் முற்றியலுகரமாகும்.


குறிப்பு:

ஙு, ஞு, நு, ஆகிய மூன்றும் சொல்லின் இறுதியில் வாரா.


காட்டுகள்:

கு, பசு, படு, இது, அபு, உறு

ணு, கிமு, மனு

யு, ஒரு, வலு, கவு, வழு, பளு


(1):4:3 மூன்று+ எழுத்து முற்றியலுகரம்

ஒரு சொல் மூன்று எழுத்துகளுடனோ மேற்பட்டோ அமைந்து, அதன் இறுதி எழுத்து

ணு, மு, னு

யு, ரு, லு, வு, ழு, ளு

ஆகிய எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் முற்றியலுகரமாகும்.


குறிப்பு:

ஙு, ஞு, நு, ஆகிய மூன்றும் சொல்லின் இறுதியில் வாரா.


காட்டுகள்:

பண்ணு, பரமு, பவுனு

சரயு, தனியொரு, அதிவலு, தழுவு, ஈரேழு, தெள்ளு


சத்தியமார்க்கம்.காம் தளத்தில்

-தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

சனி, 22 ஆகஸ்ட், 2009

பழகு மொழி - 06

(1):3 குற்றியலிகரம் (அரை மாத்திரை)

குற்றியல் உகரத்தைப் போன்றே குற்றியலிகரமும் குறுகி ஒலிப்பதாகும். உரைநடையில் வழக்கொழிந்து போனவற்றுள் குற்றியலிகரமும் ஒன்றாகும். குற்றியலிகரம் என்பது தன்னியக்கமின்றி, யகர வருமொழியைச் சார்ந்து திரியும் ஓசை என்பதாலும் தமிழில் யகர வரிசையில் தொடங்கும் சொற்கள் மிகக் குறைவு என்பதாலும் அஃது அரிதாகிப் போனது.

கவிதை புனையும் கவிஞர்கள் ஓசையழகுக்காகக் குற்றியலிகரத்தைப் பயன் படுத்துவர். முன்மொழியின் இறுதி எழுத்து வல்லின உகரக் குறிலாக (கு, சு, டு, து, பு, று) அமைந்து வருமொழியானது 'ய'கரத்தில் தொடங்கும்போது முன்மொழியின் இறுதி எழுத்தான வல்லின உகரக் குறில், இகரமாகத் திரியும். அவ்வாறு திரியும்போது அதன் ஓசை குன்றி ஒலிக்கும். திரிந்தும் குன்றியும் ஒலிக்கும் இகரமே குற்றியலிகரமாகும்.

காட்டுகள் :

வீடு+யாது = வீடியாது;
காட்டு+யானை = காட்டியானை;
எழுத்து+யகரம் = எழுத்தியகரம்.

"குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்
மழலைச் சொற் கேளாதவர்"
எனும் (
மக்கட்பேறு-66) குறளில், "குழல் இனிது" எனும் உகர ஈற்றை, "குழல் இனிதி" என்று குற்றியல் இகரமாக மாற்றிது, வருமொழிச் சொல்லான "யாழினிது"வில் உள்ள 'யா' ஆகும்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில்

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

பழகு மொழி - 05

(1):2 குற்றியல் உகரம் (அரை மாத்திரை)

கடந்த பாடம் (1):1:3:1()இல் நாம் படித்த உகர வல்லின உயிர் மெய்க் குறில் எழுத்துகளுள் ஏதேனும் ஒன்று ஒரு சொல்லின் ஈற்றாய் (கடைசி எழுத்தாக) அமைந்து, அச்சொல், கீழ்க்காணும் ஆறு வகைச் சொற்களுள் ஒன்றாக இருப்பின் அது குற்றியல் உகரம் எனப்படும்.ஒரு சொல்லின் இறுதியில் உள்ள உகர வல்லின உயிர் மெய்க் குறில் எழுத்துகள் சிலவேளை அதன் இயல்புத் தன்மையான ஒரு மாத்திரை அளவிலிருந்து குன்றி, அரை மாத்திரை அளவில் ஒலிக்கும். அதையே குற்றியல் உகரம் என்பர்.

குற்றியல் உகரத்தின் எழுத்துகள் 6: கு,சு,டு,து,பு,று (உகர வல்லின உயிர் மெய்க் குறில்கள்)

குற்றியல் உகர வகைகள் 6.

(1):2:1 நெடில் தொடர்க் குற்றியல் உகரம்:

இஃது இரண்டெழுத்துகளை மட்டும் கொண்டது. முதல் எழுத்து நெடிலாகவும் இரண்டாவதான இறுதி எழுத்து உகர வல்லின உயிர் மெய்க் குறில்களுள் ஒன்றாகவும் அமையும்.

காட்டுகள் : வாகு, காசு, மாடு, யாது, கோபு, று

(1):2:2 வன்தொடர்க் குற்றியல் உகரம்:

வன்தொடர்க் குற்றியல் உகரம் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். சொல்லின் ஈற்றில் (இறுதியில்) இடம் பெறும் உகர வல்லின உயிர் மெய்க் குறில் (கு,சு,டு,து,பு,று) எழுத்துக்கு இடப்புறம் அமைந்த (ஈற்றயல்) எழுத்து, ஈற்றெழுத்தின் மெய் (புள்ளி/ஒற்று) எழுத்தாக அமைந்திருக்கும்.

காட்டுகள் : சுக்கு, ச்சு, ட்டு, த்து, காப்பு, மாற்று

ஒரு சொல்லின் இறுதி ஈரெழுத்துகள் (க்+க்+உ=)க்கு, (ச்+ச்+உ=)ச்சு, (ட்+ட்+உ=)ட்டு, (த்+த்+உ=)த்து, (ப்+ப்+உ=)ப்பு, (ற்+ற்+உ=)ற்று ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றாக அமைந்திருந்தால் அச்சொல்லின் இறுதியில் அமைந்த எழுத்து, வன்தொடர்க் குற்றியல் உகரம் என்று எளிதாக இனங் கண்டு கொள்லலாம்.

(1):2:3 மென்தொடர்க் குற்றியல் உகரம்:

மென்தொடர்க் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். ஈற்றயலில் மெல்லின மெய்யெழுத்தைப் பெற்றிருப்பதால் மென்தொடர்க் குற்றியல் உகரம் என்றானது.

காட்டுகள் : நுங்கு, கழஞ்சு, ண்டு, சிந்து, கொம்பு, ன்று

ஒரு சொல்லின் இறுதி ஈரெழுத்துகள் ங்கு, ஞ்சு, ண்டு, ந்து, ம்பு, ன்று முதலியவற்றுள் ஏதேனும் ஒன்றாக அமைந்திருந்தால் அச்சொல்லின் இறுதியில் அமைந்த எழுத்து, மென்தொடர்க் குற்றியல் உகரம் என்று இனங் கண்டு கொள்க.

(1):2:4 இடைத் தொடர்க் குற்றியல் உகரம்:

இடைத் தொடர்க் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். ஈற்றயலில் இடையின மெய்யெழுத்தைப் பெற்றிருக்கும்.

காட்டுகள் : பெய்து, சார்பு, சால்பு, போழ்து

(1):2:5 ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரம்:

ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். ஈற்றயலில் ஆய்த எழுத்தைப் பெற்றிருக்கும்.

காட்டுகள் : கு, சு, து

குற்றியல் உகரப் பாடத்தில் இதுவரை நாம் பயின்றவை:

முதலாவதாக, ஓர் உயிர்மெய் நெடில் எழுத்தையும் ஓர் உயிர்மெய் வல்லின உகரக் குறில் எழுத்தையும் கொண்ட நெடில் தொடர்க் குற்றியல் உகரம்.

அடுத்த மூன்று பாடங்களில் (இறுதி எழுத்துக்கு இடப்புறம் அமைந்திருக்கும்) ஈற்றயலில் ஒற்று(புள்ளி எழுத்து) உடன் அமைந்த வன்/மென்/இடைத் தொடர்க் குற்றியல் உகரங்கள்.

ஐந்தாவதாக ஆய்த எழுத்தை ஈற்றயலாகக் கொண்ட ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரம்.

ஆறாவதாக நாம் பயில இருப்பது உயிர்த் தொடர்க் குற்றியல் உகரமாகும்.

(1):2:6 உயிர்(மெய்)த் தொடர்க் குற்றியல் உகரம்:

இந்தக் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். இதன் ஈற்றயல் உயிர்மெய் எழுத்தாக இருந்த போதிலும் இஃது, உயிர்த் தொடர்க் குற்றியல் உகரம் என்றே வழங்கப் படுகிறது.

காட்டுகள் : விறகு, அரசு, கசடு, எனது, மரபு, வயிறு

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

பழகு மொழி - 04

(1):1:3 உயிர் மெய்யெழுத்துகள்


ஒரு மெய்யெழுத்தும் ஓர் உயிரெழுத்தும் சேர்ந்தது, உயிர் மெய்யெழுத்தாகும்
காட்டு: க்+அ = க(குறில்); க்+ஆ = கா(நெடில்).

(1):1:3:1(அ) உயிர்மெய் வல்லினக் குறில்கள் :

க்+=

ச்+=

ட்+=

த்+=

ப்+=

ற்+=


,,,,, : அகர வல்லினக் குறில்கள் 6



க்+=கி

ச்+=சி

ட்+=டி

த்+=தி

ப்+=பி

ற்+=றி

கி,சி,டி,தி,பி,றி : இகர வல்லினக் குறில்கள் 6


க்+=கு

ச்+=சு

ட்+=டு

த்+=து

ப்+=பு

ற்+=று

கு,சு,டு,து,பு,று : உகர வல்லினக் குறில்கள் 6


க்+=கெ

ச்+=செ

ட்+=டெ

த்+=தெ

ப்+=பெ

ற்+=றெ

கெ,செ,டெ,தெ,பெ,றெ : எகர வல்லினக் குறில்கள் 6


க்+=கொ

ச்+=சொ

ட்+=டொ

த்+=தொ

ப்+=பொ

ற்+=றொ

கொ,சொ,டொ,தொ,பொ,றொ : ஒகர வல்லினக் குறில்கள் 6


(1):1:3:1() உயிர்மெய் வல்லின நெடில்கள்:

க்+=கா

ச்+=சா

ட்+=டா

த்+=தா

ப்+=பா

ற்+=றா

கா,சா,டா,தா,பா,றா : ஆகார வல்லின நெடில்கள் 6


க்+=கீ

ச்+=சீ

ட்+=டீ

த்+=தீ

ப்+=பீ

ற்+=றீ

கீ,சீ,டீ,தீ,பீ,றீ : ஈகார வல்லின நெடில்கள் 6


க்+=கூ

ச்+=சூ

ட்+=டூ

த்+=தூ

ப்+=பூ

ற்+=றூ

கூ,சூ,டூ,தூ,பூ,றூ : ஊகார வல்லின நெடில்கள் 6


க்+=கே

ச்+=சே

ட்+=டே

த்+=தே

ப்+=பே

ற்+=றே

கே,சே,டே,தே,பே,றே : ஏகார வல்லின நெடில்கள் 6


க்+=கோ

ச்+=சோ

ட்+=டோ

த்+=தோ

ப்+=போ

ற்+=றோ

கோ,சோ,டோ,தோ,போ,றோ : ஓகார வல்லின நெடில்கள் 6


(1):1:3:1() உயிர்மெய் வல்லினக் குறுக்கம்:

க்+=கை

ச்+=சை

ட்+=டை

த்+=தை

ப்+=பை

ற்+=றை

கை,சை,டை,தை,பை,றை : ஐகார வல்லினக் குறுக்கம் 6


க்+=கௌ

ச்+=சௌ

ட்+=டௌ

த்+=தௌ

ப்+=பௌ

ற்+=றௌ

கௌ,சௌ,டௌ,தௌ,பௌ,றௌ : ஔகார வல்லினக் குறுக்கம் 6


குறிப்பு:
கௌரி என்பது ஔகாரம் சேர்ந்த (வடமொழிச்) சொல்லாகும். அதை, "கெ ரி" என்று படிக்காமல் "கவ்ரி" என்பதுபோல் படிக்க வேண்டும்.

(1):1:3:2(
) உயிர்மெய் மெல்லினக் குறில்கள்:

ங்+=

ஞ்+=

ண்+=

ந்+=

ம்+=

ன்+=

,,,,, : அகர மெல்லினக் குறில்கள் 6


ங்+=ஙி

ஞ்+=ஞி

ண்+=ணி

ந்+=நி

ம்+=மி

ன்+=னி

ஙி,ஞி,ணி,நி,மி,னி : இகர மெல்லினக் குறில்கள் 6


ங்+=ஙு

ஞ்+=ஞு

ண்+=ணு

ந்+=நு

ம்+=மு

ன்+=னு

ஙு,ஞு,ணு,நு,மு,னு : உகர மெல்லினக் குறில்கள் 6


ங்+=ஙெ

ஞ்+=ஞெ

ண்+=ணெ

ந்+=நெ

ம்+=மெ

ன்+=னெ

ஙெ,ஞெ,ணெ,நெ,மெ,னெ : எகர மெல்லினக் குறில்கள் 6


ங்+=ஙொ

ஞ்+=ஞொ

ண்+=ணொ

ந்+=நொ

ம்+=மொ

ன்+=னொ

ஙொ,ஞொ,ணொ,நொ,மொ,னொ : ஒகர மெல்லினக் குறில்கள் 6


(1):1:3:2() உயிர்மெய் மெல்லின நெடில்கள்:

ங்+=ஙா

ஞ்+=ஞா

ண்+=ணா

ந்+=நா

ம்+=மா

ன்+=னா

ஙா,ஞா,ணா,நா,மா,னா : ஆகார மெல்லின நெடில்கள் 6


ங்+=ஙீ

ஞ்+=ஞீ

ண்+=ணீ

ந்+=நீ

ம்+=மீ

ன்+=னீ

ஙீ,ஞீ,ணீ,நீ,மீ,னீ : ஈகார மெல்லின நெடில்கள் 6


ங்+=ஙூ

ஞ்+=ஞூ

ண்+=ணூ

ந்+=

ம்+=மூ

ன்+=னூ

ஙூ,ஞூ,ணூ,நூ,மூ,னூ : ஊகார மெல்லின நெடில்கள் 6


ங்+=ஙே

ஞ்+=ஞே

ண்+=ணே

ந்+=நே

ம்+=மே

ன்+=னே

ஙே,ஞே,ணே,நே,மே,னே : ஏகார மெல்லின நெடில்கள் 6


ங்+=ஙோ

ஞ்+=ஞோ

ண்+=ணோ

ந்+=நோ

ம்+=மோ

ன்+=னோ

ஙோ,ஞோ,ணோ,நோ,மோ,னோ : ஓகார மெல்லின நெடில்கள் 6


(1):1:3:2() உயிர்மெய் மெல்லினக் குறுக்கம்:

ங்+=ஙை

ஞ்+=ஞை

ண்+=ணை

ந்+=நை

ம்+=மை

ன்+=னை

ஙை,ஞை,ணை,நை,மை,னை : ஐகார மெல்லினக் குறுக்கம் 6


ங்+=ஙௌ

ஞ்+=ஞௌ

ண்+=ணௌ

ந்+=நௌ

ம்+=மௌ

ன்+=னௌ

ஙௌ,ஞௌ,ணௌ,நௌ,மௌ,னௌ : ஔகார மெல்லினக் குறுக்கம் 6


குறிப்பு
: மௌரியர் என்ற சொல் ஔகாரத்தைச் சேர்ந்தது. எனவே, அதை "மெ ரி ர்" என்று படிக்காமல் "மவ்ரியர்" என்பதுபோல் படிக்க வேண்டும்.

(1):1:3:3() உயிர்மெய் இடையினக் குறில்கள்:

ய்+=

ர்+=

ல்+=

வ்+=

ழ்+=

ள்+=

,,,,, : அகர இடையினக் குறில்கள் 6


ய்+=யி

ர்+=ரி

ல்+=லி

வ்+=வி

ழ்+=ழி

ள்+=ளி

யி,ரி,லி,வி,ழி.ளி : இகர இடையினக் குறில்கள் 6


ய்+=யு

ர்+=ரு

ல்+=லு

வ்+=வு

ழ்+=ழு

ள்+=ளு

யு,ரு,லு,வு,ழு,ளு : உகர இடையினக் குறில்கள் 6


ய்+=யெ

ர்+=ரெ

ல்+=லெ

வ்+=வெ

ழ்+=ழெ

ள்+=ளெ

யெ,ரெ,லெ,வெ,ழெ,ளெ : எகர இடையினக் குறில்கள் 6


ய்+=யொ

ர்+=ரொ

ல்+=லொ

வ்+=வொ

ழ்+=ழொ

ள்+=ளொ

யொ,ரொ,லொ,வொ,ழொ,ளொ : ஒகர இடையினக் குறில்கள் 6


(1):1:3:3() உயிர்மெய் இடையின நெடில்கள்:

ய்+=யா

ர்+=ரா

ல்+=லா

வ்+=வா

ழ்+=ழா

ள்+=ளா

யா,ரா,லா,வா,ழா,ளா : ஆகார இடையின நெடில்கள் 6


ய்+=யீ

ர்+=ரீ

ல்+=லீ

வ்+=வீ

ழ்+=ழீ

ள்+=ளீ

யீ,ரீ,லீ,வீ,ழீ,ளீ : ஈகார இடையின நெடில்கள் 6


ய்+=யூ

ர்+=ரூ

ல்+=லூ

வ்+=வூ

ழ்+=ழூ

ள்+=ளூ

யூ,ரூ,லூ,வூ,ழூ,ளூ : ஊகார இடையின நெடில்கள் 6


ய்+=யே

ர்+=ரே

ல்+=லே

வ்+=வே

ழ்+=ழே

ள்+=ளே

யே,ரே,லே,வே,ழே,ளே : ஏகார இடையின நெடில்கள் 6


ய்+=யோ

ர்+=ரோ

ல்+=லோ

வ்+=வோ

ழ்+=ழோ

ள்+=ளோ

யோ,ரோ,லோ,வோ,ழோ,ளோ : ஓகார இடையின நெடில்கள் 6


(1):1:3:3() உயிர்மெய் இடையினக் குறுக்கம்:

ய்+=யை

ர்+=ரை

ல்+=லை

வ்+=வை

ழ்+=ழை

ள்+=ளை

யை,ரை,லை,வை,ழை,ளை : ஐகார இடையினக் குறுக்கம் 6


ய்+=யௌ

ர்+=ரௌ

ல்+=லௌ

வ்+=வௌ

ழ்+=ழௌ

ள்+=ளௌ

யௌ,ரௌ,லௌ,வௌ,ழௌ,ளௌ : ஔகார இடையினக் குறுக்கம் 6


குறிப்பு:
யௌவனம் என்பது ஔகாரம் சேர்ந்த (வடமொழிச்) சொல்லாகும். அதை, "யெ ம்" என்று படிக்காமல் "யவ்வனம்" என்பதுபோல் படிக்க வேண்டும். வௌவால் எனும் தழிச்சொல்லை, "வவ்வால்" என்பது போல் படிக்க வேண்டும்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.